தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நேப்பாளத்தில் பிரியாணி சமைத்து அசத்திய அஜித்

1 mins read
ea834db1-0adf-4ae5-bb27-bdc34d0500b0
நேப்பாள சமையல் கலைஞருடன் அஜித். படம்: இந்திய ஊடகம் -

இருசக்கர வாகனத்தில் மொத்த உலகையும் வலம்வர முடிவு செய்துள்ளார் அஜித்.

படப்பிடிப்புகளுக்கு மத்தியில் கிடைக்கும் ஓய்வு நேரத்தின்போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு 'பைக் பயணம்' மேற்கொண்ட அவர், அண்மையில் நேப்பாளத்துக்குச் சென்றார்

அப்போது அங்கு ரசிகர்கள் சிலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளன. இந்நிலையில் நேப்பாளத்தி்ல உள்ள உணவகம் ஒன்றில் அவர் சமையம் செய்யும் காணொளி ஒன்று இணையத்தில் வலம் வருகிறது.

அக்குறிப்பிட்ட உணவகத்தில் உள்ள சமையல் கலைஞர்களுடன் இணைந்து அவர் சில உணவு வகைகளைச் சமைக்கும் காணொளிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

அஜித் பிரியாணி சமைப்பதில் வல்லவர் என்றும் அதைத்தான் சமைத்திருப்பார் என்றும் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நேப்பாளத்தில் அஜித்தை சந்தித்த ரசிகர்க்ள அவரது எளிமையையும் அன்பான அணுகுமுறையையும் பாராட்டி உள்ளனர்.

"எங்களுடைய குடும்பங்கள் குறித்தும் அக்கறையுடன் விசாரித்தார். இதுபோன்ற எளிமையை எதிர்பார்க்கவே இல்லை," என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.