ரூ.9 கோடிக்கு கார் வாங்கிய ஒரு மாதத்தில் ரூ.4 கோடிக்கு மற்றொரு காரை வாங்கினார் அஜித்

ரூ.9 கோடிக்கு கார் வாங்கிய ஒரு மாதத்தில் ரூ.4 கோடிக்கு மற்றொரு காரை வாங்கினார் அஜித்

1 mins read
8327a597-f237-45d6-bd5d-76c9aec66ecb
புதிய காருடன் அஜித் குமார். - படம்: ஷாலினி/இன்ஸ்டகிராம்

பந்தய மோட்டார்சைக்கிள்கள், கார்கள் மீதான பேரார்வத்திற்காக புகழ்பெற்ற நடிகர் அஜித் குமார், 53, அண்மையில் ரூ.4 கோடி மதிப்புள்ள Porsche GT3 RS ரக காரை வாங்கியுள்ளார்.

ரூ.9 கோடி மதிப்பில் ஃபெராரி கார் ஒன்றை வாங்கிய ஒரு மாதத்திற்குப் பிறகு இந்தப் புதிய காரை அவர் வாங்கியுள்ளார்.

அஜித் துபாயில் தனது புதிய காரை ஓட்டும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி பரவலாகி வருகின்றன.

அஜித்தின் மனைவி ஷாலினி, தம் கணவர் புதிய காருடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார்.

கார், மோட்டார்சைக்கிள் பந்தயங்கள் மீதான அஜித்தின் ஆர்வம், அவரது தொழில் வாழ்க்கையிலும் விரிவடைந்துள்ளது.

அவர் 2003 ‘ஃபார்முலா பிஎம்டபிள்யூ ஆசியா சாம்பியன்ஷிப்’, 2010 ‘எஃப்ஐஏ ஃபார்முலா டூ சாம்பியன்ஷிப்’ உட்பட பல அனைத்துலகப் பந்தயங்களில் பங்கேற்றுள்ளார்.

அவர் சக மோட்டார் வாகன ஆர்வலர்களுடன் அடிக்கடி உலகெங்கிலும் மோட்டார் சைக்கிள் சுற்றுப்பயணங்களை மேற்கொள்கிறார்.

மேலும், சாகச மோட்டார்சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் நிறுவனம் ஒன்றையும் அஜித் தொடங்கியுள்ளார்.

திரைத்துறையைப் பொறுத்தவரை, தற்போது ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ இரு படங்களில் அஜித் நடித்து வருகிறார்.

மகிழ் திருமேனி இயக்கும் ‘விடாமுயற்சி’ அஜித்தின் அடுத்த வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்