மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்கிய அஜித்

மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்கிய அஜித்

1 mins read
6a0e498c-96a9-4ba3-ba93-cbb51d9d9daf
“கனத்த இதயத்துடன் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால், வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்”  எனக் கூறியுள்ளார் அஜித் - படம்: அஜித்குமார் ரேசிங்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகத் திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரராகவும் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.

அண்மையில் (மே 30) அஜித்தின் தாயார் காலமானார். அவரது தாயார் மறைவிற்கு முதல்வர் விஜய் மற்றும் திரை உலகினர் அஞ்சலி செலுத்தினர்.

தாயின் மறைவுக்குப் பிறகு மீண்டும் கார் பந்தயத்திற்காகத் தயாராகியுள்ளார் அஜித். அடுத்த வாரம் பிரான்சில் நடைபெறும் போட்டியில் அவரது குழு பங்கேற்கிறது.

அஜித்குமார் தனது கார் ரேசிங் பக்கத்தில், “கனத்த இதயத்துடன் வேலைக்குத் திரும்பியிருக்கிறேன். ஆனால், வாழ்க்கை நிச்சயமாகத் தொடர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

‘குட் பேட் அக்லி’ படத்திற்குப் பிறகு கார் பந்தயத்தில் அதிகக் கவனம் செலுத்தி வரும் அஜித், ‘அஜித்குமார் ரேசிங்’ என்ற தனது சொந்தப் பந்தய அணியைக் கடந்த ஆண்டு தொடங்கினார்.

அந்த அணி துபாய், பெல்ஜியம், ஸ்பெயின், அபுதாபி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அனைத்துலகப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளது. தொடர்ந்து பல முக்கியப் பந்தயத் தொடர்களிலும் அஜித்குமார் அணி கலந்து கொண்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்