மீண்டும் கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித், தற்போது இத்தாலியில் முகாமிட்டுள்ளார்.
அங்கு நடந்த ஒரு போட்டியில் பங்கேற்றபோது, அவரது கார் மீண்டும் விபத்தில் சிக்கியது. கார் சேதமடைந்தாலும், நல்ல வேளையாக அஜித்துக்கு காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரியவந்துள்ளது.
இத்தாலியில் நடந்துவரும் ‘ஜிடி-4’ (GT-4) கார் பந்தயத்தில், அஜித் தலைமையிலான அணி பங்கேற்றுள்ளது. அதற்காக கார் ஓட்டியபோது குறிப்பிட்ட வளைவு ஒன்றில் அஜித்தின் கார் திரும்பும்போது, அங்கு ஏற்கெனவே பழுதாகியிருந்த மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.