அஜித்குமார் புதிதாக வாங்கியுள்ள ஆவ்டி காரில் மணிக்கு 224 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகின்றது.
அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
பைக் மற்றும் கார் பந்தயத்தில் அதிக ஆர்வம் உடையவர் நடிகர் அஜித். இதனால் படப்பிடிப்பு நேரம் தவிர பிற நேரங்களில் கார் பந்தயங்களுக்குப் பயிற்சி செய்வது, பந்தயத்திற்காக தயாரிக்கப்பட்ட கார்களை ஓட்டிப்பார்ப்பது என பல விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ‘விடாமுயற்சி’ படத்தில் நடிப்பதற்கு அஸர்பைஜான் செல்வதற்கு முன்னர் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளுக்குச் சென்று, கார் பந்தய வீரர்களுடன் சேர்ந்து கார் ஓட்டினார். இது தொடர்பான காணொளிகளும் வெளியாகின.
இந்நிலையில், அஜித் தான் புதிதாக வாங்கியுள்ள ஆவ்டி காரில் மணிக்கு 224 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் காணொளி தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
மேலும், அந்தக் காணொளியில் அஜித், கார் செல்லும் வேகத்தைப் பார்க்கச் சொல்கிறார். ஒரே கையில் காரின் ‘ஸ்டீரிங்’கை பிடித்து தைரியமாக இவர் ஓட்டுவது பலராலும் ரசிக்கப்பட்டு, பகிரப்பட்டு வருகிறது.