மலேசியாவில் நடிகர் அஜித்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார் சிம்பு. மேலும், அஜித் அணி பங்கேற்ற போட்டியை அவர் சில நிமிடங்கள் கண்டு ரசித்தார்.
முன்னதாக, ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியா வந்திருந்த சிம்பு, அங்கு அஜித் இருப்பதை அறிந்ததும் அவரை நேரில் சந்திக்க விரும்பியுள்ளார். இதையடுத்து, ஒரு பூங்கொத்தை அஜித்துக்கு அனுப்பி தகவல் தெரிவித்தாராம்.
விமான நிலையம் செல்லும் வழியில்தான் கார் பந்தயப் போட்டி நடப்பதாக தகவலறிந்த அவர், அஜித் தன்னைச் சந்திக்க சம்மதித்ததும் உடனடியாக போட்டி நடக்கும் இடத்துக்குச் சென்றுவிட்டார்.
சிம்புவின் இளமையான தோற்றத்தைப் பார்த்து வியந்துபோன அஜித், “அருமை, இப்படியே தொடருங்கள். நிறைய படங்களில் நடியுங்கள்,” என்று அறிவுரை கூறியுள்ளார்.
இதனால் உற்சாகமடைந்த சிம்பு, “நீங்களும் அதிகப் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகிறோம்,” என்றாராம்.
இதனிடையே, விஜய்யின் ஜனநாயகன் இசை வெளியீட்டில் அஜித் கலந்துகொள்வார் என்ற வதந்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

