தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அஜித்தின் 62ஆவது படத்தின் பெயர் வெளியானது

1 mins read
be7510b9-a7ea-46ab-8928-9ae454a6cc5c
படம்: டுவிட்டர் -

நடிகர் அஜித்தின் பிறந்தநாளையொட்டி அவரின் அடுத்த படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

படத்தின் பெயர் 'விடாமுயற்சி', என்று படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இதுவரை 61 படங்களில் அஜித் நடித்துள்ளார். விடாமுயற்சி அவரின் 62ஆவது படம்.

படத்தின் பெயர் வெளியாகிய மகிழ்ச்சியில் அஜித்தின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் உற்சாகமாக பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

அஜித்தின் 52ஆவது பிறந்தநாளுக்கு திரையுலக நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தற்போது அஜித் தன்னுடைய உலக பைக் பயணத்திற்காக நேப்பாளத்தில் உள்ளதாக தமிழக ஊடகங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
அஜித்திரைச்செய்திசினிமா