சிறந்த திரைப்பட அடையாள விருதைப் பெற்ற ‘ஆக்காட்டி’

1 mins read
f61c16f5-eb3a-4867-a65c-be74c3be7c39
‘ஆக்காட்டி’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்

கோவாவில் நடைபெறும் அனைத்துலகத் திரைப்பட விழாவில், தமிழில் உருவான ‘ஆக்காட்டி’ படத்திற்கு சிறந்த திரைப்பட அடையாள விருது கிடைத்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் ஜெய் லட்சுமி உள்ளிட்ட குழுவினர் விருதை நேரில் பெற்றுக்கொண்டனர்.

தென் தமிழக கிராமப்புறங்களில் நிலவும் தாய்மாமன் சீர்வரிசை முறையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், சமுதாய மரபுகள் உருவாக்கும் நெருக்கடிகளையும் அதனால் மனித மனத்தில் எழும் சிக்கல்களையும் மென்மையான உணர்வுகளையும் பதிவு செய்துள்ளது.

பல அனைத்துலகத் திரைப்பட விழாவுக்கு அனுப்பப்பட்டிருக்கும் ‘ஆக்காட்டி’ திரைப்படம், விரைவில் நற்செய்தியுடன் ‘முதல் பார்வை’யை வெளியிடும் எனத் தயாரிப்பு குழு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்