பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அக்ஷய் குமார், தற்போது 'செல்ஃபி' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 24) வெளியாக உள்ள நிலையில், படத்தின் விளம்பரப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, ரசிகர்களுடன் செல்ஃபி புகைப்படங்கள் எடுக்கும் நிகழ்வு நடந்தது.
மூன்றே நிமிடங்களில் 184 செல்பி படங்கள் எடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அக்ஷய் குமார். இதற்கான சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.
இதுபற்றி அக்ஷய் குமார் கூறுகையில், இந்தத் தருணம் வரை நான் இதுவரை சாதித்த அனைத்து விஷயங்களிலும் எல்லா இடங்களிலும் என்னுடன் இருப்பது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பும் ஆதரவுமே காரணம்.
"இது அவர்களுக்கான என் சிறப்புப் பரிசு. அனைவருக்கும் நன்றி. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

