ஜெய்ப்பூர்: அண்மையில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த ஒரு திருமண விழா, இந்தித் திரையுலகின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அக்ஷய் குமாருக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்தது.
அத்திருமண ஊர்வலத்தில் மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் அவர் இணைந்து 'பாங்ரா' நடனமாடியதே அதற்குக் காரணம்.
அந்தக் காணொளியைத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார் அக்ஷய்.
அப்பதிவில், "மோகன்லால் சாருடன் இணைந்து ஆடிய நடனத்தை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன். நிச்சயமாக மறக்க முடியாத தருணம் இது!" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பதிவைக் கண்ட ரசிகர் ஒருவர், "பிரியதர்ஷனின் இரு விலைமதிப்புமிக்க ரத்தினங்கள்," என்று ஒரு குறிப்பிட்டிருக்கிறார்.
பெயர்பெற்ற இயக்குநரான பிரியதர்ஷனின் பல படங்களில் இவர்கள் நடித்துள்ளனர்.
அண்மையில் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படத்தில் நடிப்பதற்காக நடிகர் மோகன்லால் ராஜஸ்தானின் ஜெய்சல்மீருக்குச் சென்றிருந்தார்.

