தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

82 வயதில் தந்தையாகவுள்ள முன்னணி நடிகர்

1 mins read
c3fe94fa-8469-4161-87a9-14d493a7e0c9
படம்: அல்பசினோ/டுவிட்டர் -

உலகப் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவரான அல் பசினோ தமது 82 வயதில் தந்தையாகவுள்ளார்.

காட் ஃபாதர், ஸ்கர்பேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து அனைவரையும் ஈர்த்த அல் பசினோவுக்கு ஏற்கெனவே மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

தற்போது நான்காவது பிள்ளைக்கு அப்பாவாக உள்ளார் அல் பசினோ.

அல் பசினோவின் காதலியும் படத் தயாரிப்பாளருமான நூர் அல்ஃபாலா கர்ப்பமாக உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

29 வயதான நூர் அல்ஃபாலா 2022ஆம் ஆண்டு முதல் அல் பசினோவுடன் வசித்துவருவதாகவும் கூறப்படுகிறது.

அல் பசினோவின் சில படங்களை தமிழ் நடிகர்கள் அஜித், கமல் உள்ளிட்டோர் கோலிவுட்டுக்கு ஏற்றபடி மாற்றி வெற்றிப் படங்களாக மாற்றியுள்ளனர்.

அல் பசினோ 82 வயதில் தந்தையாகவுள்ள செய்தியை அறிந்த இணையவாசிகள், நகைச்சுவையான சில பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்