தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிம்புவிடம் எதிர்பார்க்கும் அனைத்தும் புதுப்படத்தில் இருக்கும்: அஸ்வத் மாரிமுத்து

1 mins read
822b94d5-4b47-44ca-9faf-bf3563c1d3af
சிம்புவுடன் அஸ்வத் மாரிமுத்து. - படம்: ஊடகம்

நடிகர் சிம்பு அடுத்து ‘டிராகன்’ படப் புகழ் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘காட் ஆஃப் லவ்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இதன் படப்பிடிப்பு இந்த ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்றும் 2026ல் படம் வெளியாகும் என்றும் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தெரிவித்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

“சிம்பு என்னுடைய படத்தில் நடிப்பதைவிட அவரை நான் இன்னும் நிறைய படங்களில் பார்க்க விரும்புகிறேன். ‘எஸ்டிஆர் 51’ படத்துக்கான திரைக்கதை, வசனம் எழுதும் பணி நடந்து வருகிறது.

“எனது முந்தைய இரு படங்களில் ரசிகர்களுக்கு என்னவெல்லாம் பிடித்ததோ, சிம்புவிடம் நீங்கள் ரசித்தீர்களோ அவை அனைத்தும் புதுப் படத்திலும் இருக்கும்,” எனத் தெரிவித்துள்ளார் அஸ்வத் மாரிமுத்து.

குறிப்புச் சொற்கள்