சூரியும் ஐஸ்வர்யா லட்சுமியும் ‘மாமன்’ என்ற புதிய படத்தில் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூசையுடன் தொடங்கியுள்ளது.
‘விலங்கு’ இணையத் தொடரை இயக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ் இப்படத்தை இயக்குகிறார்.
நடிகர் ராஜ்கிரண் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம்.
“குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வகையில் ஒரு கதையைப் படமாக்குகிறோம்.
“அனைத்துப் பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்த படமாக உருவாகிறது.
“ஹேசம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படம் திட்டமிட்டபடி வெளியாகும்,” என்கிறார் இயக்குநர்.