23 ஆண்டுகள் கழித்து இணையும் கூட்டணி

1 mins read
a782fef9-e1c2-4047-bdae-613dec5d8dfd
பிரசாந்த். - படம்: ஊடகம்

நடிகர் பிரசாந்திற்கு கடந்த ஆண்டு மிகவும் ராசியான ஆண்டாக இருந்தது.

கதாநாயகனாக ‘அந்தகன்’, விஜய்யின் நண்பராக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ என இரு படங்கள் வெளியாகி அவருக்குத் தமிழ்த் திரையுலகில் மீண்டும் வெற்றி வாகை சூட பாதை அமைத்து தந்தன.

விஜய் படத்தில் அவரது நடனம் பேசப்பட்டதோடு, ‘அந்தகன்’ படத்தில் அவரது நடிப்பு அனைவரும் ரசிக்கும்படியாக இருந்தது.

‘அந்தகன்’ படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியானாலும், தற்போது ஓடிடியில் வெளியாகி அதிகப் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

‘அந்தகன்’ வெற்றியைத் தொடர்ந்து பிரசாந்த்தின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். முன்னணி இயக்குநர்கள் பலரிடமும் பிரசாந்தும் கதைகள் கேட்டுவந்த நிலையில் அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

முன்னணி இயக்குநர் ஒருவருடன் அவர் கைகோக்க இருப்பதாகவும் கோடம்பாக்கத்தில் செய்திகள் பரவி வருகின்றன.

பிரசாந்தின் 55வது படத்தை இயக்குநர் ஹரி இயக்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

பிரசாந்த் நடித்த ‘தமிழ்’ படத்தின் மூலம்தான் ஹரி இயக்குநராக அறிமுகமானார். பிரசாந்தின் 55வது படத்தில் சாய்பல்லவி, கயாடு லோஹர், பூஜா ஹெக்டே என பலரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்