‘புஷ்பா 2’ படத்தில் சேலை அணிந்து நடித்தது குறித்து அல்லு அர்ஜுன்

‘புஷ்பா 2’ படத்தில் சேலை அணிந்து நடித்தது குறித்து அல்லு அர்ஜுன்

1 mins read
66bb2cc8-8436-44d9-b5c8-c9993594a3f9
நடிகர் அல்லு அர்ஜுன். - படம்: விகடன்

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் பெண் வேடமிட்டு ஜாதரா திருவிழாவில் நடனமாடிய காட்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.

தற்போது ஃபோர்ப்ஸ் இந்தியாவுக்குப் பேட்டியளித்த அல்லு அர்ஜுன், “என்னுடைய திரைப் பயணத்திலேயே நான் செய்த கெத்தான விஷயம் என்னவென்றால், அது ‘புஷ்பா 2’ படத்தில் நான் பெண் வேடமிட்டு நடித்த காட்சிதான்,” என்றார்.

திருப்பதி பகுதியில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் ‘கங்கம்மா தல்லி ஜாதரா’ திருவிழாவில் ஆண்கள் பெண்ணாக வேடமிட்டு வழிபடும் வழக்கம் உண்டு.

அதை அடிப்படையாகக் கொண்டு, “நீங்கள் சேலை அணிந்து பெண் வேடத்தில் நடிக்க வேண்டும்,” என்று இயக்குநர் தன்னிடம் கூறியதாக அவர் தெரிவித்தார்.

“தொடக்கத்தில் இந்த யோசனையைக் கேட்டதும் எனக்குப் பயமாக இருந்தது. சேலை அணிந்திருந்தாலும் அந்தக் கதாபாத்திரத்தின் கம்பீரம் குறையக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதுவே படத்தின் மிகப்பெரிய பலமாக மாறியது,” என அல்லு அர்ஜுன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்