டிசம்பர் மாதம் வெளியாகும் ‘புஷ்பா 2’

1 mins read
5acca0d7-72ab-4ea1-ad8c-2810299c62a1
புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. - படம்: அல்லு அர்ஜுன் 

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’.

இந்தப் படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. ‘புஷ்பா 2 தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில் அப்படத்தின் ‘டீசரும்’ அதனைத் தொடர்ந்து படத்தின் ‘புஷ்பா புஷ்பா’ என்ற பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பில் சில தாமதங்கள் ஏற்பட்டதால் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், ‘புஷ்பா 2 தி ரூல்’ படம் வருகிற டிசம்பர் 6ஆம் தேதி வெளியாகும் என அல்லு அர்ஜுனும் இயக்குனர் சுகுமாரும் அதிகாரபூர்வமாக உறுதிசெய்தனர்.

குறிப்புச் சொற்கள்