‘புஷ்பா’ படத்தின் மூலம் இந்திய அளவில் புகழ்பெற்ற தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், தற்போது அட்லி இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் பெரும் பொருட்செலவிலான அறிவியல் புனைவுக் கதைப் படத்தில் நடித்து வருகிறார்.
அதைத்தொடர்ந்து, அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிப்பது தற்போது உறுதியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புக் காணொளி வெளியானது.
வரும் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில், இப்படத்தில் அல்லு அர்ஜுன் இதுவரை இல்லாத முற்றிலும் மாறுபட்ட புதிய தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகதக் கூறப்படுகிறது.

