அமலா பால் நடித்திருக்கும் ‘லெவல் க்ராஸ்’ ஓடிடியில் வெளியானது
‘ஆடுஜீவிதம்’ திரைப்படத்திற்குப் பிறகு அமலா பால் ‘லெவல் க்ராஸ்’ படத்தில் நடித்துள்ளார். இவர் ஆசிஃப் அலியுடன் இணைந்து நடித்துள்ளார்.
ஆசிஃப் அலி மலையாள சினிமாவில் மிக முக்கியமான நடிகராவார். இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான ‘கிஷ்கிந்தா காண்டம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படம் இதுவரை 75 கோடி ரூபாய் உலகளவில் வசூலளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை அறிமுக இயக்குநரான அர்ஃபாஸ் அயுப் இயக்கியுள்ளார்.
‘லெவல் க்ராஸ்’ திரைப்படம் நேற்று அமேசான் பிரைம் ஓடிடியில் தமிழ், இந்தி, கன்னடம் மலையாளம், ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.