நடிகர் அமிதாப்பச்சன் தனது ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துகளை தனது மகளுக்கும் மகனுக்கும் சரிசமமாகப் பிரித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசிய காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.
அதில், “திருமணத்துக்குப் பிறகு மகள் வேறு வீட்டுக்குச் சென்றுவிடுவதாக எல்லாரும் கூறுகிறார்கள். ஆனால் என் பார்வையில் அவள் என் மகள்தான். எனவே மகளுக்கும் சொத்தில் பங்குண்டு,” என்கிறார் அமிதாப்.
அவரது இந்த முடிவின்படி மருமகள் ஐஸ்வர்யா ராயும் பல கோடி சொத்துகளுக்கு அதிபதியாகிறார்.
இக்குறிப்பிட்ட காணொளி ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்டது.
எனினும், அவர் எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.