தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சந்தானத்துக்கு அம்மாவானார் கஸ்தூரி

1 mins read
21f41324-c66e-4e23-a0d6-9cf85acbc82a
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானத்திற்கு அம்மாவாக நடித்திருக்கிறார் கஸ்தூரி. - படம்: ஊடகம்

‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானத்திற்கு அம்மாவாக நடித்திருக்கிறார் கஸ்தூரி.

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இப்படத்தில் அவருடன் இயக்குநர்கள் கௌதம் மேனன், செல்வராகவன் மற்றும் கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், நிழல்கள் ரவி, கஸ்தூரி, லொள்ளு சபா ஜீவா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்தப் படம் வருகிற மே மாதம் 16ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் தற்போது கலந்துகொண்டு வருகிறார் சந்தானம்.

இந்தப் படத்தில் சந்தானத்தின் அம்மாவாக கஸ்தூரி நடித்திருக்கிறார். இதுகுறித்து சந்தானம் கூறுகையில், “அம்மா வேடத்தில் நடிக்க வேண்டும் என்றதும், சந்தானத்திற்கு என்னை அம்மாவாக நடிக்க சொல்வதா? எனக்கென்ன அவ்வளவு வயதாகிவிட்டதா என்று கஸ்தூரி அதிர்ச்சி அடைந்தார். ஆனால் அதையடுத்து கதையைக் கேட்டுவிட்டு முடிவைச் சொல்லுங்கள் என்று இயக்குநர் அவரிடத்தில் மொத்த கதையும் சொன்னதும் உடனே சம்மதம் தெரிவித்தார். காரணம் இந்தப் படத்தில் அவர் நடிக்கும் அம்மா கதாபாத்திரம்தான் கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிறது,’’ என்றார் சந்தானம். மேலும், தற்போது சந்தானத்திற்கு 45 வயதும், கஸ்தூரிக்கு 50 வயதும் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை