‘மதராசப்பட்டினம்’ மூலம் 2010ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார் பிரிட்டனைச் சேர்ந்த நடிகை ஏமி ஜாக்சன்.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘ஏக் தீவானா தா’, ‘தாண்டவம்’, ‘தங்கமகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘ஐ’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் கதாநாயகியாக வலம் வந்தார் இவர்.
ஏமியும் அவரின் காதலருமான பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக், கடந்த ஜனவரி மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 23) இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.
ஏமி ஏற்கனவே ஜார்ஜ் என்பவருடன் ஒன்றாக வாழ்ந்தார். இருவருக்கும் ஒரு மகன் இருக்கிறார். பின்னர் இருவரும் பிரிய நேரிட்டது.
இந்நிலையில் 2022ஆம் ஆண்டில் ஏமி, எட் வெஸ்ட்விக்கை காதலிக்கத் தொடங்கினார்.
தனது திருமணப் படங்களை ஏமி தனது இன்ஸ்டகிராம் கணக்கில் பதிவேற்றியுள்ளார்.
இப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

