மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார் நடிகை ஏமி ஜாக்சன்.
‘மதராசபட்டினம்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர், பின்னர் ‘ஐ’, ‘தங்க மகன்’, ‘கெத்து’, ‘தெறி’, ‘2.0’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
அதன் பின்னர் திரையுலகை விட்டு விலகிய அவர், ஒரு குழந்தைக்குத் தாயான பின்னர் மீண்டும் நடிக்க வந்துள்ளார். மேலும், இதுகுறித்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஏமி.
“ஏறக்குறைய ஓராண்டுக்குப் பிறகு என் மகனைப் பிரிந்து முதன்முறையாக வேலைக்குச் செல்வது மிகவும் வருத்தமாக உள்ளது. எப்போது வீடு திரும்பி மகனைப் பார்ப்போம் என்ற ஏக்கமும் அதிகரிக்கிறது. அதேசமயம் இந்தப் பிரிவு, சிரமம் எல்லாமே என் மகனுக்காகத்தான் என நினைக்கும்போது சற்று ஆறுதலாகவும் இருக்கிறது,” என்று தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார் ஏமி.

