வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ‘அரசன்’ படத்தில் நாயகனாக நடிக்கிறார் சிலம்பரசன்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில், நடிகை ஆண்ட்ரியாவும் இப்படக் குழுவுடன் இணைந்துள்ளார். இத்தகவலை அவர் தமது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வட சென்னையைக் கதைக்களமாகக் கொண்டு உருவாகும் ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த வாரம் கோவில்பட்டியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதற்கு முன்பு ‘வட சென்னை’ படத்தில் சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஆண்ட்ரியா.
‘அரசன்’ படத்தின் கதாநாயகி யார் என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், ஆண்ட்ரியா நடிப்பது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

