தன்னைப் பற்றிய சர்ச்சைகள் வட்டமடித்துக் கொண்டிருந்தாலும், இயக்குநர் மிஷ்கின் தன் போக்கில் சென்று கொண்டிருக்கிறார்.
அவரது இயக்கத்தில் உருவான ‘பிசாசு-2’ படம் வெளியாகாமல் தாமதமாகிக்கொண்டே இருந்தது.
இந்த இடைவெளியில் விஜய் சேதுபதியை வைத்து ‘ட்ரெயின்’ என்ற படத்தை இயக்கி முடித்துவிட்டாராம்.
இப்போது ‘பிசாசு-2’ படம் வெளியாவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது. அதன் நாயகியான ஆண்ட்ரியா, அந்தப் படத்தைக் காண ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தனக்கு நெருக்கமான வட்டத்தில் உள்ள சிலருக்கு மட்டும் படத்தை திரையிட்டுக் காட்டியுள்ளார் மிஷ்கின்.
படத்தைப் பார்த்த அனைவருமே, “ஆண்ட்ரியாவின் நடிப்பு அருமை. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கும்,” எனப் பாராட்டியதாகத் தகவல். இதனால் ஆண்ட்ரியாவைவிட மிஷ்கின் அதிக மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்.