நடிகை ஆண்ட்ரியா அண்மைக் காலமாக ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்பு திருவண்ணாமலை கோவிலில் பக்தியுடன் தரிசனம் மேற்கொண்ட அவர், தற்போது நேரடி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத்தான் அதிகம் விரும்புகிறார்.
“இதுவரை நான் பாடிய திரையிசைப் பாடல்களுக்கு மட்டுமன்றி, தனி இசைத் தொகுப்புகளில் பாடிய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.
“மேலும், ஓசூரில் நான் நடத்திய இசைக் கச்சேரிக்கு நல்ல கூட்டம் வந்ததால் மேலும் பல ஊர்களில் நடக்கும் கச்சேரிகளில் பங்கேற்க உள்ளேன்,” என உற்சாகமாகச் சொல்கிறார் ஆண்ட்ரியா.
நிறைய இளையர்கள் இசைத்துறையில் அறிமுகமாவதை வரவேற்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

