அனிமேஷன் பதிப்பில் ‘ஆர்ஆர்ஆர்’

அனிமேஷன் பதிப்பில் ‘ஆர்ஆர்ஆர்’

படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

08 Feb 2026 - 2:50 pm

1 mins read

ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘ஆர்ஆர்ஆர்’. வசூலிலும் அசத்திய இந்தப் படம் உலக அளவில் பேசப்பட்டது.

இந்நிலையில், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை அனிமேஷன் வடிவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஜப்பானில் உள்ள சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இத்தகவலை ராஜமௌலியே ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது அவர் இயக்கி வரும் ‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு, ‘ஆர்ஆர்ஆர்’ அனிமேஷன் பதிப்பின் கணினித் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் தொடங்கப்படுமாம்.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஆகிய இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த ‘ஆர்ஆர்ஆர்’ படம் வெளிநாடுகளிலும் பெரும் வசூலைப் பெற்றது. மேலும், இப்படத்தில் இடம்பெற்ற ‘நாக்கு நாக்கு’ பாடலுக்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது.

குறிப்புச் சொற்கள்
திரைப்படம்இயக்குநர்சாதனை