நடிகர் விக்ரமும் இசையமைப்பாளர் அனிருத்தும் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர்.
வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், விக்ரம் நாயகனாக நடிக்கும் படம் குறித்து அண்மையில் தகவல் வெளியானது.
‘ஹாய்’ பட இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது.
முழுவதும் அதிரடி, பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் இப்படத்தில் பாடல்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விக்ரம் நடிப்பில் முன்பு வெளியான ‘மகான்’ படத்துக்கு இசையமைக்க அனிருத்தான் முதலில் ஒப்பந்தமானார். சில காரணங்களால் அவரால் இசையமைக்க முடியாமல் போக, சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமானார்.
இந்நிலையில், விக்ரமை வைத்து தாம் இயக்கும் படத்துக்கு அனிருத்தை ஒப்பந்தம் செய்தால் சரியாக இருக்கும் என்று இயக்குநர் விஷ்ணு கூற, அதை ஏற்றுக்கொண்டு அனிருத்தை ஒப்பந்தம் செய்துள்ளது தயாரிப்புத் தரப்பு.