தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாபெரும் இசை நிகழ்ச்சியை நடத்தும் அனிருத்

1 mins read
de60d20b-d342-47c8-9b68-6911c2e5db7d
இசை நிகழ்ச்சியில் அனிருத். - படம்: அனிருத்/சமூகஊடகம்.

தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழியில் வெளியாகும் திரைப்படங்களுக்கும் இசையமைத்து, இந்திய அளவில் மாபெரும் இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார் அனிருத்.

ரசிகர்களின் விருப்பத்திற்காக மேடை இசை நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் அனிருத்.

இந்நிலையில், வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி ஹுக்கும் (Hukum) எனும் பெயரில் அனிருத்தின் மாபெரும் இசை நிகழ்ச்சி சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கூவத்தூர்ப் பகுதியில் அமைந்துள்ள ‘மார்க் சொர்ணபூமி ‘எனும் இடத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார்.

பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் பங்கேற்கும் இந்தப் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஆகஸ்ட் 4 ம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் இந்த நிகழ்ச்சி ஜூலை 26ம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அது ஒத்திவைக்கப்பட்டது.

பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு, வாகன நிறுத்துமிட வசதி என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.

அனிருத் கடந்த சில ஆண்டுகளாக இந்திய நகரங்கள் மட்டுமில்லாது, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கத்தார் உள்ளிட்ட பல நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி அசத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இதில் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அனைத்து நுழைவுச் சீட்டுகளும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்