‘கோட்’ படத்தின் பாடல்கள் கலவையான விமர்சனங்களைத் தான் பெற்றிருக்கிறது. அனிருத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் பழகிவிட்டது தான் இதற்குக் காரணம் என ‘கோட்’ படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், “‘கோட்’ படத்தின் பின்னணி இசைக்காக யுவன் சங்கர் ராஜா அதிக உழைப்பைக் கொடுத்துள்ளார். ஆனால், படத்தில் சில பாடல்கள் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனக் கூறப்படுகிறது.துப்பாக்கி படம் போல கோட் படத்தின் பாடல்கள் கேட்கக் கேட்க எல்லோரையும் வசப்படுத்த அதிக வாய்ப்பு இருக்கிறது,” என அவர் அதில் கூறினார்.