அண்மைக் காலமாக முன்னணி இசையமைப்பாளர்களும்கூட தனி இசைத்தொகுப்புகளில் கவனம் செலுத்துகின்றனர். அத்தொகுப்புகளில் இடம்பெறும் பாடல்கள் அவ்வப்போது ஒவ்வொன்றாக வெளியாகின்றன.
அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத் இசையில் ஒரு பாடல் வெளியாகியுள்ளது. அவரே அப்பாடலைப் பாடியுள்ள நிலையில், அப்பாடலுக்கான காணொளியில் அவர் நடிகை ஸ்ரீலீலாவுடன் இணைந்து நடனமாட உள்ளாராம்.
தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம்வரும் ஸ்ரீலீலா, இன்னும் தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. அவர் விரைவில் தமிழில் அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அனிருத்துடன் இணைந்து நடனமாட ஒப்புக்கொண்டுள்ளாராம்.