‘விடாமுயற்சி’ படம் பார்த்துவிட்டு அபராதம் கட்டிய அனிருத்

2 mins read
739a02c6-fa1a-44c6-9274-8b870ea2cc87
‘விடாமுயற்சி’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத். - படம்: ஊடகம்

‘விடாமுயற்சி’ படம் வெளியான அன்று சென்னையில் ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் அபராதம் வசூலித்திருக்கிறார்கள் போக்குவரத்து போலிசார் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதில் ‘விடாமுயற்சி’ படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டதும் அடக்கம்.

‘விடாமுயற்சி’ படம் வெளியான அன்று முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் திரையரங்குகளுக்கு படையெடுத்தார்கள்.

அந்தப் படத்திற்கு இசையமைத்த அனிருத்தும் சென்னை குரோம்பேட்டையில் இருக்கும் பிரபல திரையரங்கில் படம் பார்த்தார்.

படம் முடிந்து வெளியே வந்த அனிருத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நேரமாகி வந்ததால் தன் காரை நிறுத்த இடம் இல்லாமல் போனதால் திரை[Ϟ]ய[Ϟ]ரங்கிற்கு வெளியே காரை நிறுத்திவிட்டுச் சென்றார் அனி[Ϟ]ருத். அவர் காரை நிறுத்திய இடம் ‘நோ பார்க்[Ϟ]கிங்’ இடம்.

அதனால் அனிருத் காரை பூட்டிவிட்டார்கள் போக்குவரத்து போலிசார். இதையடுத்து ரூ.1,000 அபராதம் கட்டிவிட்டு காரை எடுத்துச் சென்றார். அனி[Ϟ]ருத் மட்டும் அல்ல பலரும் படம் பார்க்கும் அவசரத்தில் வாகனங்களை அனிருத் நிறுத்தியது போலவே நிறுத்தியுள்ளனர்.

அப்படி வாகனங்களை நிறுத்தியவர்களிடமிருந்து மட்டும் ரூ. 50 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் வசூல் செய்திருக்கிறார்கள் போக்குவரத்துத் துறை போலிசார் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது.

அஜித் குமாருக்காக இது கூட செய்ய மாட்டோமா என்று சந்தோஷமாக அபராதம் கட்டிவிட்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், படத்தின் இசையமைப்பாளரே ‘விடாமுயற்சி’ பார்க்க வந்து அபராதம் கட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றது தான் இதில் முக்கியச் செய்தி என சினிமா ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகர்