தனது இசையில் உருவான பாடலையே இசையமைப்பாளர் அனிருத் காப்பி அடித்துவிட்டதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
தெலுங்கில் உருவாகும் ‘தேவரா’ என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார் அனிருத். இப்படத்தின் ஒரு விளம்பரத்தில் ‘தாவுதி’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பாடல் அருமையாக இருப்பதாக பலர் பாராட்டி வரும் நிலையில், இது விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘அரபிக்குத்து’ பாடலைப்போல் உள்ளது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
தன் பாடலை தாமே காப்பி அடிக்கும் அளவுக்கு அனிருத்திடம் புது மெட்டுகளுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளதா எனப் பலர் சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
எனினும் தயாரிப்பாளர்கள் விரும்பியதால்தான் அனிருத் இதற்கு ஒப்புக்கொண்டதாக ‘அரபிக்குத்து’ பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் கூறியுள்ளார்.