மலையாள நடிகையான அனிஷ்மா அனில்குமார் தமிழின் ‘சிறை’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறப்பான நடிப்பை வழங்கி அப்படத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்களிப்பைச் செய்தார்.
தொடர்ந்து, நடிகர் கென்னுடன் இணைந்து ‘யூத்’ திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் இடம்பெற்ற ‘முட்ட கலக்கி’ பாடலிலும் தனக்கான காட்சிகளிலும் அனிஷ்மா சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தார். அத்திரைப்படமும் ரூ.80 கோடி வரை வசூலித்து வெற்றியைப் பதிவுசெய்தது.
அண்மையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் திரைக்கு வந்த ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் ரிஷிகாந்த்துக்கு ஜோடியாக நடித்துப் பலரையும் கவர்ந்திருந்தார்.
அடுத்தடுத்து மூன்று வெற்றிப் படங்களில் நடித்த அனிஷ்மா தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரிக்கும் ‘மாகாளி’ திரைப்படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
தமிழில் அறிமுகமாகி ஒரே ஆண்டிற்குள் முக்கிய நடிகையாக வளர்ந்து வரும் அனிஷ்மா சக நடிகைகளையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.


