‘மத கஜ ராஜா’ படத்தைத் தொடர்ந்து விஷாலுடன் மீண்டும் இணைந்து நடிக்கிறார் அஞ்சலி.
‘ஈட்டி’ பட இயக்குநர் ரவி அரசு இயக்கும் புதிய படத்தில் விஷால் நாயகனாக நடிக்க உள்ளார். துஷாரா விஜயன் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு, ஜிவி பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகி உள்ளது.
இந்நிலையில், நடிகை அஞ்சலியையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். எனினும், அவர் நாயகியாக நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே, எத்தகைய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
‘மத கஜ ராஜா’ படத்துக்குப் பிறகு விஷாலும் அஞ்சலியும் மீண்டும் இணைந்து நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விஷால் புதுப் படம் எதிலும் நடிக்கவில்லை.

