‘அண்ணா, இதைக் கொஞ்சம் பாருங்கள்’: ரசிகரிடம் மன்னிப்பு கோரிய சூரி

1 mins read
c9d8e314-8708-4c2e-bcb4-83b95061eea5
சூரி. - படம்: Varnam.my

‘மண்டாடி’ என்ற தலைப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சூரி.

மதிமாறன் புகழேந்தி இயக்கும் இந்தப் படம், படகுப் போட்டியை மையமாக வைத்து உருவாகிறது.

மகிமா நம்பியார், நடிகர் சுஹால் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சூரிக்கு சமூக ஊடகம் வழி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“அன்புள்ள சூரி அண்ணா, உங்கள் படப்பிடிப்பு எங்கள் ஊரில் நடப்பது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், இரவில் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வரும் எங்கள் பகுதி மக்களிடம் உங்களுடைய பாதுகாவலர்கள் கடுமையாக நடந்துகொள்கிறார்கள்,” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் அந்த ரசிகர்.

இதையடுத்து, அந்த ரசிகரிடம் மன்னிப்பு கோரியுள்ளார் சூரி. மேலும், தயாரிப்புத் தரப்பிடமும் பாதுகாவலர்களிடமும் இனி மிகுந்த கவனத்துடன் இருக்கச் சொல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எப்போதும் ரசிகர்களின் அன்பே எங்களுக்குப் பலம். மீண்டும் நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார் சூரி.

குறிப்புச் சொற்கள்