‘டாக்சிக்’ குறித்து அறிவிப்பு

‘டாக்சிக்’ குறித்து அறிவிப்பு

1 mins read
08529bf5-c181-4955-94fa-97163feaa5c8
‘டாக்சிக்’ படத்தின் டீசரில் இடம்பெறும் காட்சி. - படம்: கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் / யூடியுப்

‘டாக்சிக்’ திரைப்படத்தின் டிரெய்லர் இம்மாதம் எட்டாம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டிரெய்லருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

‘கேஜிஎஃப்’ படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் யாஷ் நடித்துள்ள ‘டாக்சிக்’ படத்தை இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கியுள்ளார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த அதிரடிப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அண்மையில் வெளியான ‘லேடீஸ் அண்ட் லேடீஸ்’ அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 1940 முதல் 1970ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கோவாவில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல், குண்டர் கும்பல்களின் பின்னணியை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

அண்மையில் வெளியான ‘டாக்சிக்’ படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது. அதே நேரத்தில், அதில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களும் எழுந்தன.

குறிப்பாக, சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியதால் டீசரைப் பற்றிப் பரபரப்பாக பேசப்பட்டது.

முதலில் மார்ச் மாதம் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீடு பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது ஆகஸ்ட் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

குறிப்புச் சொற்கள்