தனுஷ் நடித்து, இயக்கி இருக்கும் ‘இட்லி கடை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்.
விழாவில் பேசத் தொடங்கிய அவர், இட்லி கடை படத்தைப் பாராட்டிய பின்னர், “தனுஷின் சம்மதத்துடன் ஓர் அறிவிப்பை வெளியிடுகிறேன்,” என்று சொன்னார்.
“வெற்றிமாறனுடன் இணைந்து எனது வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ‘வடசென்னை 2’ படத்தினை விரைவில் துவங்குகிறோம்,” என்று ஐசரி கணேஷ் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பினால் தனுஷ் ரசிகர்கள் பெரும் உற்சாகமாகி இருக்கிறார்கள்.
தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவான ‘வடசென்னை’ படத்தின் இரண்டாவது பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக நீண்ட காலமாகக் கூறப்பட்டு வந்தாலும் தனுஷ், வெற்றிமாறனின் அடுத்தடுத்த பட வேலைகள் காரணமாக இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் படம் துவங்குவது தாமதமாகிக் கொண்டே வந்தது.
தற்போது அறிவிப்பு வெளியாகிவிட்டதால், இதன் தயாரிப்பு உரிமையினை வேல்ஸ் நிறுவனத்துக்கு தனுஷ் வழங்கியிருக்கும் தகவலும் வெளிவந்துள்ளது.