ஒரு காலத்தில் இந்தியில் இருந்து பல நடிகைகளைத் தமிழ்த் திரையுலகத்தில் அறிமுகப்படுத்தினர். பிறகு மலையாளத்தில் இருந்து அதிகமானோர் அறிமுகமாகினர்.
இப்போது கன்னட மொழி நடிகைகளுக்கான நேரம் போல் இருக்கிறது. பல கன்னடத்துப் பைங்கிளிகள் தமிழ்ப் படங்களில் அறிமுகமாகிய வண்ணம் உள்ளனர்.
ருக்மிணி வசந்த், சைத்ரா ஆகியோரைத் தொடர்ந்து கோடம்பாக்கத்துக்கு வந்துள்ளார் சானியா. தற்போது பெயரிடப்படாத படத்தில் நாயகியாக நடித்து வரும் இவர், கன்னட ‘பிக் பாஸ் ஓடிடி சீசன் 1’ன் இறுதிச்சுற்றுக்குத் தேர்வானவர். அந்த வகையில் கன்னடத்தில் முதல் படத்தில் நடிக்கும் முன்பே தனி ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ளார்.
மேலும், குழந்தை நட்சத்திரமாகப் பல கன்னடப் படங்களில் நடித்துள்ளாராம். இந்தத் தகுதியுடன் தமிழுக்கு வந்த சானியாவை அண்மையில் தமிழ் இணையத்தொடர் ஒன்றில் நடிக்கக் கேட்டு அணுகினார்களாம்.
அவரோ, “எனக்குத் தமிழ் சினிமா குறித்து அதிகம் தெரியாது. முதல் படம் வெளியான பிறகு பேசுவோம்,” என்று கூறி, நாசூக்காகத் தேடி வந்த வாய்ப்பை ஒதுக்கிவிட்டதாகத் தகவல்.