இயக்குநர் ஷங்கரின் மகன் அர்ஜித் விரைவில் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.
தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குநராக இருக்கும் அவர், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மதராஸி படத்தில் பணியாற்றி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
அர்ஜித்தின் முதல் படத்தை அட்லீயின் உதவியாளர் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே, ஷங்கரின் மகள் அதிதி, தமிழ்த் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகி ரசிகர்களிடையே பிரபலமடைந்துள்ள நிலையில், அவரின் மகனும் நாயகனாக வேடம் தரிக்கவுள்ளார்.
இந்தித் திரையுலகில் இருப்பதுபோல் திறமைக்கு முன்னுரிமை அளிக்காமல் திரையுலகில் முன்னணியில் இருப்போரின் வாரிசுக்கு வாய்ப்பு அளிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகத் திரைப்பட விமர்சகர்கள் கூறுகின்றனர்.