உற்சாகத்தில் இருக்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன். காரணம், இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகைக்கு இவர் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின்றன.
வழக்கமாக, தீபாவளிக்கு தமிழில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் என்பதால் மலையாளத்தில் புதுப் படங்கள் ஏதும் வெளியாகாது. காரணம், தமிழ்ப் படங்களுக்கு கேரளாவில் கிடைக்கும் வரவேற்புதான். ஆனால், இந்த வருடம் தமிழ்த் திரையுலகத்தின் நிலைமை தலைகீழாகிவிட்டது.
தமிழில் மூன்று குறைந்த பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகும் நிலையில், மலையாளத்தில் மூன்று படங்கள் திரைகாண உள்ளது.
“தமிழில் ‘பைசன்’, மலையாளத்தில் ‘பெட் டிடெக்டிவ்’ ஆகிய இரண்டு படங்களில் நான் நடித்துள்ளேன். இரண்டும் தீபாவளியையொட்டி வெளியாகின்றன. மேலும், ஜூலையில் ‘ஜேஎஸ்கே’ (மலையாளம்), ‘பர்தா’ (தெலுங்கு) என மாதந்தோறும் நான் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியீடு காண உள்ளன.
“ஒருவேளை இந்த ஆண்டு, ‘அதிக படங்களில் நடித்த நாயகி’ என்ற பெயரும் எனக்குக் கிடைக்கக்கூடும்,” என்கிறார் அனுபமா.