தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிற்போக்குத்தனங்களை விமர்சிக்கும் படத்தில் அனுபமா

1 mins read
9c0aa186-cf19-4f0a-97d0-cf6d0dbe91a6
அனுபமா பரமேஸ்வரன். - படம்: ஊடகம்

சில மோசமான அனுபவங்களைப் பெற்ற பிறகு, அதிலிருந்து மீண்டுவிட்டதாகச் சொல்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.

தமிழில் ‘பைசன்’, ‘லாக்டவுன்’ படங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘பரதா’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு மிக அழுத்தமான கதாபாத்திரம் அமைந்துள்ளதாம்.

‘சினிமா பண்டி’, ‘சுபம்’ ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காண்ட்ரேகுலா, ‘பரதா’ படத்தை இயக்கியுள்ளார்.

பாரம்பரியம் என்ற பெயரில் பல தலைமுறைகளாகப் பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை இந்தப் படம் கடுமையாக விமர்சிக்கிறதாம்.

“அதேசமயம் சமூகத்துக்குத் தேவைப்படும் ஒற்றுமை, மாற்றத்துக்கான முன்னேற்றம் பற்றியும் பேசியிருக்கிறோம். சில விஷயங்களை அறிவுரையாகக் கூறினால் ஏற்க மாட்டார்கள். சினிமா போன்ற ஊடகங்கள் நிச்சயம் உதவும்,” என்கிறார் இயக்குநர் பிரவீன் கன்ரேகுலா.

குறிப்புச் சொற்கள்