பாராட்டுகளைக் குவித்துவரும் அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக் டவுன்’ திரைப்படம்

1 mins read
2b16f9a9-f3cd-4f21-bf25-3f5a32b014e1
அனுபமா பரமேஸ்வரன். - படம்: இந்திய ஊடகம்

கோவா அனைத்துலத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட அனுபமா பரமேஸ்வரனின் ‘லாக் டவுன்‘ திரைப்படத்திற்கு வாழ்த்துகள் குவிகின்றன.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘லாக் டவுன்’ திரைப்படம், கோவாவில் நடந்த 56வது அனைத்துலக இந்திய திரைப்பட விழாவில் அனைத்துலகப் பார்வையாளர்களுக்காகத் திரையிடப்பட்டது.

அரங்கம் முழுவதும் நிரம்பியிருந்த பார்வையாளர்கள், விருந்தினர்கள், விழாக் குழுவினர், திரை ஆர்வலர்கள் என அனைவரும் படத்திற்கும் படக்குழுவினருக்கும் பெரும்பாராட்டு தெரிவித்தனர். இந்த வரவேற்புக்கு படக்குழுவினர் தங்களது நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் ஏ.ஆர். ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லாக் டவுன்’ திரைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, லிவிங்ஸ்டன், பிரியா வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு படத்தொகுப்பாளராக சாபு ஜோசப், இசையமைப்பாளராக என். ஆர்.ரகுநந்தன் - சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார்கள்.

லாக் டவுன் காலகட்டத்தில் மக்களுக்கு ஏற்பட்ட உணர்வு, உளவியல் ரீதியிலான தாக்கங்களை மையப்படுத்தி இந்தத் திரைப்படம் தயாராகியுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டக் காட்சி ஏற்கெனவே வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், தற்போது அனைத்துலகத் திரைப்பட விழாவில் கிடைத்திருக்கும் பாராட்டுகள் படத்தைப் பற்றிய ஆவலை மேலும் தூண்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்திசினிமாநடிகை