“பேய்கள் சம்பந்தப்பட்ட கதைகளை ரசிப்பதற்கு சிறு வயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். இப்போது நானே அப்படிப்பட்ட படத்தில் நாயகியாக நடித்திருப்பது புது அனுபவமாக இருந்தது,” என்கிறார் அனுபமா பரமேஸ்வரன்.
‘கிஷ்கிந்தாபுரி’ என்ற திகில் படத்தைத்தான் அவர் குறிப்பிடுகிறார். கவுசிக் இயக்கியுள்ள இப்படம், செப்டம்பர் 12ஆம் தேதி திரைகாண உள்ளது.
இந்நிலையில், படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பு வெளியானபோது பலருக்கும் ஆச்சரியம். அதில் பேய் உருவத்தில் தோன்றி ரசிகர்களை மிரள வைத்திருந்தார் அனுபமா.
இந்நிலையில், அண்மைய பேட்டி ஒன்றில், சிறு வயதில் திகில் படங்களைப் பார்த்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.
“வீட்டில் பெற்றோர் தூங்கச் சென்ற பிறகு ரகசியமாக பேய்ப் படங்கள் பார்ப்பேன். அப்போது அனைத்து விளக்குகளையும் அணைத்துவிடுவேன். இதுபோன்ற படங்களை இருட்டில் பார்த்தால்தான் சுவாரசியமாக இருக்கும்,” என்று தெரிவித்துள்ளார் அனுபமா.