தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுபமா.
இவர், அண்மையில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான ‘டிராகன்’ படத்தில் நடித்து இருந்தார்.
அதையடுத்து இவர் பிரவீன் கந்த்ரேகுலா இயக்கத்தில் ‘பரதா’ படத்திலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ஷர்வானந்தின் 38வது படத்தில் அனுபமா இணைந்துள்ளார்.
அனுபமாவும் ஷர்வானந்தும் இதற்கு முன்பு ‘ஷதமானம் பவதி’ என்ற படத்தில் நடித்திருந்தனர்.
இப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்தது. தற்போது இவர்கள் மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.