நான் உன்னை என்றென்றும் காதலிப்பேன் என்று சொல்வதுதான் உலகத்திலேயே ஆகப்பெரிய பொய் என்கிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இதுபோன்ற வசனங்களைப் பேசும் சூழலில் உள்ளவர்கள் உடனடியாக அந்தக் காதல் வளையத்திலிருந்து வெளியேறி விடுவது நல்லது என்றும் இதுதான் காதல் வசப்பட்டவர்களுக்கு தனது எளிய அறிவுரை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனுபமா இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவருடனும் பின்னர் ஓர் இளம் நடிகருடனும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். அந்த காதல்(கள்) என்னவானது என்று தெரியாத நிலையில், திடீரென காதல் மீது இவருக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.