விஜய் சேதுபதியுடன் ‘மகாராஜா’ படத்தில் நடித்திருந்தார் பிரபல இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப். அப்படம் பெரும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் இயக்குநர் அலெயாண்ட்ரோ, தன் படத்தில் நடிக்க அனுராக்குக்கு அழைப்பு விடுத்துள்ளாராம்.
“அதற்குக் காரணம் ‘மகாராஜா’ படம்தான்’ எனத் தனது மகள் திருமணத்தில், அவரைச் சந்தித்தபோது அனுராக் கூறினார்.
“அதைக் கேட்டபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்,” என்று ‘மகாராஜா’ படத்தின் இயக்குநர் மிதிலன் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.