அனுஷ்கா ஷெட்டி இரண்டு படங்களில் நடித்து முடித்து இருக்கிறார்.
‘அருந்ததி’ பேய் படத்தில் நடித்து பிரபலமான அனுஷ்கா ஷெட்டி, தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.
‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்குப் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், பின்னர் நடித்த ‘பாகுபலி’ முக்கிய படமாக அமைந்தது. இவர் நடிப்பில் 2023ஆம் ஆண்டு ‘மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி,’ படம் வெளியானது.
தற்போது அனுஷ்கா ‘காதி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். விக்ரம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் தள்ளிப் போவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் இப்படம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
அடுத்ததாக அனுஷ்கா நடித்துள்ள படம் ‘கத்தனார்- தி வைல்ட் சோர்சரர்’. இது இவரது மலையாள அறிமுகப் படமாகும். அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விரைவில் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் ‘பாகமதி 2’ உருவாக உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.