நடிகை அனுஷ்கா முதன்முறையாக மலையாளப் படத்தில் நடித்துள்ளார். ‘கத்தனார்’ என்ற தலைப்பில் உருவாகும் அப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.100 கோடி எனக் கூறப்படுகிறது.
மலையாள நடிகர் ஜெயசூர்யா நாயகனாக நடிக்கும் அப்படத்தில் வினீத், பிரபுதேவா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் மாதம் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக அனுஷ்கா தெரிவித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடித்த படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.