அடுத்த ஆண்டு வெளியாகும் அனுஷ்காவின் ‘காதி’

1 mins read
d859a51c-0245-4fd4-8f5e-218396d7ca10
அனுஷ்கா. - படம்: ஊடகம்

அனுஷ்கா நடிப்பில் உருவாகியுள்ள புதுப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓரிரு ஆண்டுகளாக அவர் அதிக படங்களில் நடிக்கவில்லை.

தற்போது ‘காதி’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார். கிரிஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் அறிமுகக் காணொளி ஏற்கெனவே வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

அக்காணொளியில் அனுஷ்கா தன் எதிரி ஒருவரைக் கொலை செய்வது போன்ற காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இதனால் இதில் வன்முறை அதிகம் இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி ‘காதி’ படம் வெளியாகும் எனப் படத்தின் தயாரிப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்