இயக்குநர் கிரிஷ் ஜெகர்லமுடி இயக்கத்தில் உருவான ‘காட்டி’ திரைப்படத்தில் நடிகை அனுஷ்கா, விக்ரம் பிரபு, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
‘ஆக்ஷன் திரில்லர்’ பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் சுவரொட்டி, முன்னோட்டக் காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இப்படம் வருகிற ஜூலை 11ஆம் தேதி பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்திருந்தனர்.
ஆனால், படத்தை சந்தைப்படுத்தும் பணிகள் துவங்காமல் இருந்த நிலையில், தற்போது தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘காட்டி’ படத்தின் தரத்தை மேம்படுத்த வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இப்படம் செப்டம்பரில் திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.